புத்தகப்பை வேண்டாம்!
இராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், இனி அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகப்பையைக் கொண்டுவர வேண்டியதில்லை ('No-Bag Day') என்று அறிவித்துள்ளார். அந்நாளில் கலாசாரம், விளையாட்டு, ஆளுமை வகுப்புகள், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் நடைபெறும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.