பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில்!
ஜப்பானில் உள்ள கியூசு தீவில் குமாமோட்டோ என்ற இடத்தில் சமீபத்தில் தொடர்ந்து இரு முறை பூகம்பம் ஏற்பட்டது. சிறிய அளவில் 600 நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் வீடுகள், கட்டடங்கள் இடிந்ததிலும், நிலச்சரிவிலும் மக்கள் சிக்கி பாதிப்புக்குள்ளாகினர். இடப் பற்றாக்குறையால் பலர் குமாமோட்டா மத்திய சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியின் போதும் வீடுகளை இழந்தவர்கள் சிறையில் தங்க வைக்கப்பட்டனர்.