வயலின் சக்கரவர்த்தி
வைத்தியநாதன்: 2.3.1935 - 8.9.2008குன்னக்குடி, சிவகங்கை மாவட்டம்தந்தை நடத்தி வந்த 'சண்முக வித்யாசாலை' என்ற சமஸ்கிருத பாடசாலையில் இவரும் படித்து வந்தார். அது மட்டுமன்றி இவரது குடும்பமே ஓர் இசைக்குடும்பம். அவரது சகோதரிகள் பாட, அண்ணன் மிருதங்கம் வாசிப்பார். அவர்கள் அனைவரும் சேர்ந்து பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியதன் காரணமாக, இளம் வயதிலேயே தென்னிந்திய பாரம்பரிய இசை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது! ஒருநாள் அவர்களது கச்சேரிக்கு, வயலின் இசைக் கலைஞர் வராமல் போனதால், 'உங்கள் கடைசிப் பையனை வயலின் வித்வான் ஆக்கிவிடுங்களேன்?' என்று கேலி பேசப்பட்டது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட இவரது தந்தை, 8 வயதிலேயே இசை நுணுக்கங்களுடன் வயலின் கற்றுத் தந்தார். இப்படி வளர்ந்து வந்த இசைக் கலைஞர்தான் குன்னக்குடி (குன்றக்குடி) வைத்தியநாதன்.மிகுந்த ஆர்வத்துடன் வயலின் இசையைக் கற்றுக்கொண்டு, 12வது வயதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு பக்கவாத்தியம் வாசிக்கத் தொடங்கினார். அப்போது இசைத் துறையில் கொடிகட்டிப் பறந்த செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோருடன் இணைந்து, ஆரம்பத்தில் குழு கச்சேரிகளில் பங்கேற்றார். 1976க்குப் பிறகே தனியாகக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து, 3000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை அரங்கேற்றியுள்ளார். கர்நாடக இசை, திரைப்பட இசை இவற்றோடு நிறுத்தாமல், பறவைகள், விலங்குகளின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் மிகத் துல்லியமாக வயலினில் வாசித்துப் பிரமிக்க வைத்தார். இசையால் நோய்களைக் குணப்படுத்துவது பற்றிய ஆராய்ச்சிக்காக, 'ராக ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பையும் நிறுவினார்.நெற்றியில் நீண்ட திருநீற்றுப் பட்டை, பெரிய குங்குமப் பொட்டு என எளிமையான தோற்றம் கொண்ட வைத்தியநாதன், பாமர மக்களையும் கவர்ந்து இழுத்ததால், 'வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர்' என்று போற்றப்பட்டார். விருதுகள்1970 - தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது1989 - இசைப் பேரறிஞர்1993 - சங்கீத நாடக அகாதெமி1996 - சங்கீத கலாசிகாமணிகலைமாமணிபத்மஸ்ரீ