களத்தில் கணக்கு - கை பம்ப் கணக்கு!
பழமையான வீடு ஒன்றில், கை பம்ப் இருக்கிறது. அந்த பம்புக்கு அடியில் எப்போதும், 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.பம்ப் கைப்பிடியை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர், 3 அடி மேலே எழும். மீண்டும், பம்ப் கைப்பிடியை மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிப் போய்விடுகிறது. எனில், பம்ப்பை, எத்தனை முறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர் கிடைக்கும்?விடை: 25 முறைஎப்படியென்றால், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தும்போது, 3 அடி அளவு தண்ணீர் மேலே எழும்புகிறது. அதை, மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிச் சென்றுவிடுகிறது. இதன்மூலம், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்த, 1 அடி அளவுக்குத் தண்ணீர் மேலே எழும்புகிறது.அப்படி, 25 முறை கீழ்நோக்கி அழுத்த, 25 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் மேலே வரும்.