உள்ளூர் செய்திகள்

கிறுக்கலாக எழுதினால் மருத்துவர்களுக்கு அபராதம்

மருத்துச்சீட்டுகளில் கிறுக்கலாக எழுதித் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு வங்கதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும், மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, பலராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், 'என்ன மருந்து என்பது புரியாத அளவுக்கு மருத்துவர்கள் கையெழுத்து உள்ளது' என்று வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மருத்துவ கவுன்சிலிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், 'மருத்துவர்கள், மருந்துச்சீட்டில் இனி கிறுக்கி எழுதித் தரக்கூடாது. கணினியில் டைப் செய்துதான் மருந்துச்சீட்டு தரவேண்டும். ஒருவேளை டைப் செய்து தர முடியாத நிலை இருந்தால், எல்லோருக்கும் புரியும்படியான கையெழுத்தில் மருந்தின் பெயர்களை எழுதித் தரவேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !