உள்ளூர் செய்திகள்

கோட்டைகள் கலைநயத்தின் காட்சிகள்

மன்னர் காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டவை கோட்டைகள். அந்தக் காலத்துக் கட்டடக் கலையையும், அரசர்களின் போர்த்தந்திரங்களையும் அறிந்துகொள்ள முடிகிற அரிய சாட்சிகளாகத் திகழ்கின்றன.* கோட்டைகள் பலவிதமாக உருவாக்கப்படுகின்றன. சில கோட்டைகள், மன்னர் தங்குமிடம், போர் வீரர்களுக்கான வசதிகள், அரச அலுவலகங்கள், முக்கியமானவர்கள் தங்குமிடம் போன்றவற்றை உள்ளடக்கியவை. சில கோட்டைகள் நகரங்களையே அவற்றுள் அடக்கியிருந்தன. இந்தக் கோட்டைகளின் மதில்கள் எதிரிகள் கடப்பதற்குக் கடினமாக இருப்பதற்காக உயரமாக உருவாக்கப்பட்டவை.* மதில் சுவர்களில் போர்வீரர்கள் கண்காணிப்பதற்கான காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.* கோட்டை மதில் சுவர் இடையில் முக்கியமான சில இடங்களில் மட்டும் வாசல்கள் அமைக்கப்பட்டு, உறுதியான கதவுகளினால் பாதுகாக்கப்பட்டிருக்கும். * கோட்டைகள் பல ஆழமான அகழிகளால் சூழப்பட்டு இருக்கும். கோட்டை வாயிலை அணுகுவதற்காக அகழிக்குக் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டிருக்கும். தேவை ஏற்படும்போது இந்தப் பாலங்கள் எடுத்துவிடக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.இந்தியாவின் மிக முக்கியமான சில கோட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!மெஹ்ரான்கர் கோட்டை ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம்.கட்டியவர்: ராவ் ஜோதா கட்டப்பட்ட வருடம் : 1460150 மீட்டர் - உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. - நுழைவாயில்கள்: 7 மதில் சுவர்: 118 அடி உயரம் / 69 அடி அகலம்செங்கோட்டை டில்லி மாநிலம்கட்டியவர்: ஷாஜகான் / காலம்: 17ஆம் நூற்றாண்டு கோட்டை நீளம்: 2.41 கி.மீ.நுழைவாயில்கள்: 2 (லாகூர் கேட் / இந்தியா கேட்)உஸ்தாத் அஹமத் எனும் கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. (1639- 1648)கோல்கொண்டா கோட்டைதெலுங்கானா மாநிலம்கட்டியவர்: ககாதியா அரசர்கள் காலம்: 13ஆம் நூற்றாண்டு சீரமைத்துக் கட்டியவர்: இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலிகாலம்: 16ஆம் நூற்றாண்டுபரப்பளவு: 11 கி.மீ. / சுற்றுச்சுவர்: 7 கி.மீ.நுழைவாயில்கள்: 8குவாலியர் கோட்டைமத்தியப் பிரதேச மாநிலம்கட்டியவர்: ராஜா மான்சிங் தோமார்காலம்: 15ஆம் நூற்றாண்டுபரப்பளவு: 3 சதுர கி.மீ.கோட்டைக்கு உள்ளே உள்ள அரண்மனைகள்: 6இந்தக் கோட்டை 'இந்தியாவின் ஜிப்ரால்டர்' என்று அழைக்கப்படுகிறது.ஆக்ரா கோட்டைஉத்தரப் பிரதேச மாநிலம்கட்டியவர்: ரஜபுத்திரர்கள் காலம்: 11ஆம் நூற்றாண்டுசீரமைத்துக் கட்டியவர்: அக்பர் வருடம்: 1573 மதில் சுவர் உயரம்: 70 அடி15 லட்சம் பேர் கட்டடப்பணியில் ஈடுபட்டவர்கள்பரப்பளவு: 2.5 சதுர கி.மீ. செஞ்சிக் கோட்டைவிழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடுகட்டியவர்: பல்லவ மன்னர் செஞ்சியர் காடவர் கோன்காலம்: 11ஆம் நூற்றாண்டு மதில் சுவர் உயரம்: 60 அடி / அகழி அகலம் 80 அடி 12 கி.மீ. நீளமுள்ள முக்கோண வடிவ மதில் சுவர்களால் இணைக்கப்பட்டுள்ளது.சித்தோர்கர் கோட்டைராஜஸ்தான் மாநிலம்.கட்டியவர்: மௌரியர்கள்காலம்: 7 ஆம் நூற்றாண்டு180 மீட்டர் உயர மலை மீது அமைந்துள்ளது. - நுழைவாயில்கள்: 7 பரப்பளவு: 700 ஏக்கர்ஜெய்சல்மேர் கோட்டைராஜஸ்தான் மாநிலம்.கட்டியவர்: ராவல் ஜெய்சல்கட்டப்பட்ட வருடம்: 1156நீளம்: 1500 அடி / அகலம்: 750 அடிசுற்றுச் சுவர் உயரம்: 30 அடிகாவல் கோபுரங்கள்: 99ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டைகர்நாடகா மாநிலம்கட்டியவர்: விஜய நகரப் பேரரசர் திம்மண்ண நாயக்கர்கட்டப்பட்ட வருடம்: 1454சீரமைத்துக் கட்டியவர்: திப்பு சுல்தான்காலம்: 1782நுழைவாயில்கள்: 4வேலூர் கோட்டைதமிழ்நாடுகட்டியவர்: குச்சி பொம்மு நாயக்கர்காலம்: 16ஆம் நூற்றாண்டு / பரப்பளவு: 133 ஏக்கர்அகழி: 191 அடி அகலம் / 29 அடி ஆழம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிப்பாய் கலகம் 1806ஆம் ஆண்டு இங்கு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !