புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1. துர்க்மேனிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய ஏரி சாரிகாமிஷ்.2. மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட இந்திய மாநிலம் சிக்கிம்.3. புதன் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர 88 நாட்கள் ஆகும்.4. உலகின் மிகச் சிறிய நதி அமெரிக்காவில் ஓடும் ரோ நதி.5. ஹிப்போகேம்ப் என்பது நெப்டியூனின் துணைக்கோள்.விடைகள்:1. மெய்2. பொய். அருணாசலப் பிரதேசத்தில் தான் மக்கள் அடர்த்தி குறைவு3. மெய்4. மெய் 5. மெய்