உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: தமிழ் இசை

1. குழந்தையை உறங்க வைக்கப் பயன்படும் தமிழ் இசையின் பெயர் என்ன?_________________________2. மரணம் அடைந்தவருக்கு இறுதிச் சடங்கின் போது பாடும் இசை?_________________________3. தமிழ் இசையின் அடிப்படை வடிவங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?_________________________4. ஸ்தாயி (Pitch) என்பதைத் தமிழ் இசையில் இவ்வாறு கூறுவர்?_________________________5. மண்டிலத்தின் வகைகள் யாவை?_________________________6. பெண்ணின் வளைகாப்பின்போது பாடப்படும் இசை?_________________________7. பிரபல தமிழ் இசை நூல்கள் ஐந்து_________________________8. ஐவகை நிலங்களில் எந்த நிலத்தில் தமிழ் இசை அதிகமாகச் செழித்தோங்கியது?_________________________9. பாணர்கள் தமிழ் இசை வாசிக்க முக்கிய இசைக்கருவியாக விளங்குவது எது?_________________________10. தமிழ் இசையின் முக்கிய தந்தி இசைக்கருவி?________________________விடைகள்1. தாலாட்டு 2. ஒப்பாரி3. பண்4. மண்டிலம்5. மெலிவு (High), சமண் (Medium), வலிவு (Low)6. நலுங்குப் பாட்டு7. சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு8. மருதம் 9. பறை 10. யாழ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !