உள்ளூர் செய்திகள்

பொரி எப்படிக் கிடைக்கும்?

பொரி, புழுங்கல் அரிசியில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நெல்லை பக்குவமாக வேகவைத்து (நெல்லின் வாய் லேசாக விரியும்போது) எடுக்க வேண்டும். அதை வெய்யிலில் அதிகம் முறிந்து விடாமல் பார்த்து எடுக்க வேண்டும். காய்ந்த நெல்லை அரவை மில்லில் (அல்லது உரலில் இட்டு குத்த வேண்டும்) கொடுத்து அரைக்க வேண்டும். இதன் விளைவாக, தவிடு வேறாகவும் அரிசி வேறாகவும் கிடைக்கும்.இந்தப் புழுங்கல் அரிசியில் தேவையான அளவு எடுத்து, உப்புக் கரைத்த நீரைத் தெளிக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் ஆனதும் வெயிலில் ஈரம் போக காய வைக்க வேண்டும். வெய்யில் இல்லை எனில், வறுக்கும் பாத்திரத்தில் அரிசியைப் போட்டு ஈரம் போக, லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய நேரம் வறுத்தால், அரிசி வறுபட்டு விடும். பிறகு பொரி கிடைக்காது. வறுத்த அரிசியை எடுத்து வைத்துக்கொண்டு, வறுக்கும் பாத்திரத்தில் உப்பு அல்லது மணல் போட்டு சூடேற்ற வேண்டும். அது சூடேறியதும் வறுத்து வைத்துள்ள அரிசியை போட்டு கிளறிக்கொண்டே வந்தால், வெண்ணிறத்தில் பொரி மலரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !