உள்ளூர் செய்திகள்

கவிதை எப்படி இருக்க வேண்டும்?

கம்பராமாயணத்தை ஒரு கையிலும், தாயுமானவரின் பாடல்களை ஒரு பையிலும் எடுத்துக்கொண்டு இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம் என்றவர், தமிழறிஞர்ச.து.சு.யோகியார். 'கூத்த நூல்' என்ற நாட்டிய நூலுக்கு உரை எழுதியவர். பாரதியைப் பற்றி இவர் கூறும்போது, 'நிமிர்ந்த நடை நேரான பார்வை, மெலிந்த உடல், முறுக்கு மீசை, கிறுக்கு நெஞ்சம், படபடத்த பேச்சு, இடிக்குரல், கையில் ஒரு புத்தகம், இதுதான் நான் பாரதியை பார்த்த முதல் பார்வை. உட்காரும் போது கூட, விறைத்துக்கொண்டுதான் உட்காருவார். சாப்பாடு கொஞ்சம்தான். ஆனால் உரிமைக் குரல் எழுப்பியது அதிகம். அவரது சொற்பொழிவுகள் தனி வகையானவை. அவரது வாக்கில் மென்மை இருக்காது. கோபம் துள்ளும். வழவழ, கொழ கொழ பேச்சையே வெறுத்தவர் பாரதி' என்கிறார், யோகியார்.யார் மனத்தையும் புண்படுத்தாது, வசை பாடாது, தவறு இருந்தால் நாசுக்காக சுட்டிக்காட்டும் இயல்புடையவர் யோகியார். விருப்பு, வெறுப்பு இன்றி எதையும் மென்மையாக அணுகும் குணம் கொண்டவர். காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்பைப் பார்த்து, அரசு வேலையைத் தூக்கியெறிந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறை சென்றவர்.கவிதை என்பது, 'மனிதனை உயர்த்த வேண்டும். மனங்களை உருக்க வேண்டும். புதுப்பாதைக் காட்ட வேண்டும். சமூகத்தில் நிலவும் தீமைகளைச் சாட வேண்டும். சமூகத்துக்கு என்ன தேவையோ அதை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும்' என்பது யோகியாரின் கருத்து. இவர் கவிதையில் மனிதனுக்குக் கூறிய அறிவுரை: 'சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்சாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்' காலம்: 30.9.1904 - 23.07.1963


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !