உள்ளூர் செய்திகள்

எப்படி பிரிப்பது?

500 ரூபாய் இருக்கிறது. குறிப்பிட்ட விகிதத்தில், இருவருக்கு பிரித்து தர வேண்டும். இப்படி, ஒரு குறிப்பிட்ட அளவை, கொடுத்த விகிதத்தில் பிரிக்கும் கணக்கீட்டை, ஆறாம் வகுப்பில் படிக்க நேர்கிறது. இரண்டு எளிய சூத்திரங்களைப் பயன்படுத்தி, எளிதாகப் பிரிக்கலாம். N என்ற அளவை a:b என்ற விகிதத்தில், இரு பிரிவுகளாக கண்டறிய கீழ்க்கண்ட இரண்டு சூத்திரங்களை பயன்படுத்தலாம். முதல் பிரிவு = (a/a+b)xNஇரண்டாம் பிரிவு = (b/a+b)xNஓர் உதாரணத்தில், இதை பயன்படுத்திப் பார்ப்போம் இரு நபர்களுக்கு 280 ரூபாய்களை 3:5 என்ற விகிதத்தில் பிரித்து வழங்க வேண்டும்.N=280; a = 3; b = 5; என எடுத்துக் கொள்வோம். முதல் பிரிவு: (a/a+b)xN => (3/3+5)x280 = (3/8)x280 = 3x35 = 105இரண்டாம் பிரிவு: (b/a+b)xN => (5/3+5)x280 = (5/8)x280 = 5x35 = 175 இப்படி உடனடியாக கண்டறிந்து விடலாம். இரண்டு பிரிவுகளையும் கூட்டினால் 280 வந்துவிடும். ஆக, நாம் சரியாக கணக்கிட்டுள்ளோம். இப்போது a : b என்ற விகிதத்தில் அமைந்துள்ள இரு பிரிவுகளில் ஒன்று தெரியும்; மற்றொன்று தெரியாது. அதை எப்படி கணக்கிடுவது? அந்த இரு பிரிவுகளை X, Y என்று வைத்துக் கொள்வோம்.Y தெரிந்தால் Xன் மதிப்பு, X = aY/bஅதேபோல் X கொடுக்கப்பட்டு இருந்தால், Y ன் மதிப்பு, Y = bX/aஉதாரணமாக, ஒரு செவ்வகத்தின் நீள, அகல அளவுகள் 4:7 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அதன் அகலம் 77 செ.மீ. அதன் நீளம் எவ்வளவு என்று கண்டறிவோம்.நீளத்தை X எனவும், அகலத்தை Y எனவும் கொள்வோம். a = 4; b = 7; Y = 77 என அமைகிறது. ஆக, அகலம் X = aY/b = (4x77)/7 = 44. இந்த எளிய கணக்குகள் வேலை வாய்ப்புகளுக்காக வைக்கப்படும் போட்டி தேர்வுகளில்கூட கேட்கப்படுகின்றன. - வி. மனோஜ்குமார், கணித ஆசிரியர், பை கணித மன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !