நானும் புத்திசாலிதான்!
சர்வதேச காக்கைகள் தினம் - ஏப்ரல் 27காகம். ஒற்றுமைக்கும், பகிர்ந்து உண்ணுதலுக்கும் உதாரணம் காட்டப்படும் பறவை. காகத்தால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் நன்மையும் இருக்கிறது. ஒரு காகம், ஒரு நாளில், கிட்டத்தட்ட 200 கிராம் அளவிலான குப்பையை உணவாக உட்கொள்கிறதாம்! மனிதர்களோடு ஒட்டி வாழும், மனித வாழ்க்கையால் பயன்பெறும் உயிரினத்துக்கு சினாந்த்ரோப் (Synanthrope)என்று பெயர்.உதாரணம்: எலி, கரப்பான்பூச்சி, புறா, பேன், காகம்...40க்கும் மேற்பட்ட காக்கை இனங்கள் இருக்கின்றன. பல்வேறு நிறங்களில், அளவுகளில் காகங்கள் இருக்கின்றன. * காகத்தைப் 'பாடும் பறவை' என்றுதான் உயிரியல் அறிஞர்கள் இனம் பிரிக்கிறார்கள். * மனிதர்கள் வாழும் பகுதிக்கு 5 கி.மீ. அப்பால் காகம் வாழாது.* நமது பகுதி காக்கைகள்: வீட்டுக்காக்கைகள் - கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறமாகவும் உடலின் பிற பகுதிகள் கருப்பாகவும் இருக்கும். * அண்டங்காக்கைகள் - உடல் முழுவதும் அடர்கருப்பாகவும், சற்றுத் தடிமனாகவும் இருக்கும்1000க்கும் மேற்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடும். பூச்சிகள், புழுக்கள், வௌவால், மீன், தவளை, தானியம், கொட்டை, ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், நூடுல்ஸ், பர்கர்... * முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடுகள் கட்டும். * 3 - 6 முட்டைகள்வரை இடும். * பழுப்பு, ஊதா, பச்சை என்று முட்டைகளின் நிறம் வேறுபடும். * 18 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். இறக்கை முளைத்துப் பறப்பதற்கு 35 நாட்கள்வரை ஆகும். ஆயுட்காலம் 17 முதல் 21 வருடங்கள்வரை.பறவைகளிலேயே மூளை வளர்ச்சி அதிகம் உள்ளது காகம்தான். மூளை அளவிலும் செயல்பாட்டிலும் சிம்பன்ஸியை ஒத்திருக்கிறது. உண்மைச் சம்பவம்: பரிசோதனைச் சாலையில் ஒரு காகம், உணவுப் பொருள் எட்டவில்லை என்பதற்காக, அங்கு இருந்த ஒரு மெல்லிய கம்பியைக் கொக்கி மாதிரி வளைத்து, அதைக்கொண்டு அந்த உணவுப் பொருளை எடுத்துச் சாப்பிட்டது. பானையில் கற்களைப் போட்டுத் தண்ணீர் குடித்த கதை உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வருமே!