உள்ளூர் செய்திகள்

அமிழ்தமிழ்து: சொல்வளம்

ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குக்காக உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்துக்கொள்ளுங்கள். தேர்வுதான், ஆனால் இது ஜாலியான தேர்வு. தமிழ்ச் சொற்கள் எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும் என்று சோதிக்கும் தேர்வு இது. இப்போது உங்களுக்கு விடுமுறைதானே... விளையாட்டாக இதைச் செய்து பார்க்கலாம். கூடச் சேர்ந்து விளையாடப் பெரியவர்களையும் அழைத்துக்கொள்ளலாம். குறிப்புகளை வைத்து, காலி இடங்களை நிரப்பி சொற்களை முழுமை ஆக்குங்கள். 1. மேடை - அர________2. ஆள்பவன் - அர________3. பெருமாளிகை - அர________4. ராட்சதன் - அர________5. பாம்பு - அர________6. வெட்டிப்பேச்சு - அர________7. புலம்புதல் - அர________விடைகள்:1. அரங்கம் 2. அரசன்3. அரண்மனை 4. அரக்கன்5. அரவம்6. அரட்டை7. அரற்றுதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !