இந்த வார முக்கிய தினங்கள்
மே 3: பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மே 3: உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை (இந்த வருடம் மே 3) கடைபிடிக்கப்படுகிறது. மே 4, 1799: மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் முக்கியமானவர். இளம் வயதிலேயே சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் இறந்த நாள்.மே 5, 1821: 'முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது' என்பது இவரது தாரக மந்திரம். பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் இருந்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் இறந்த நாள்.மே 6, 1861: இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு - காந்தி குடும்பத்தின் முன்னோடி. முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு பிறந்த நாள்.