இந்த வார முக்கிய தினங்கள்
மே 24, 1819: உலகை ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் இவருடைய காலம் மிகவும் முக்கியமானது. மிக அதிக நாட்கள் ராணியாக இருந்துள்ளார். இந்தியாவின் முதல் பேரரசியாக 1876, மே 1 முதல் இறக்கும் வரை இருந்தார். 'ஐரோப்பாவின் பாட்டி' என்று அழைக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா பிறந்தநாள்.மே 24, 1543: வானியலாளர், கணிதவியலாளர், பொருளியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டிய நிக்கோலஸ் கோபர்னிகஸ் நினைவு நாள்மே 29, 1917: அமெரிக்க அதிபர்களுள் மிகவும் முக்கியமானவர். உலகப் பெருந்தலைவர்களில் ஒருவரும் மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தவருமான அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி பிறந்தநாள்.மே 29, 1829: இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்த சர். ஹம்பிரி டேவி நினைவு நாள்.