ஸ்மார்ட்போனுக்குள் மூழ்கும் இந்தியர்கள்
இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் பலரும்,செயலிகளை பயன்படுத்துவதில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆண்டிராய்டு போனில் அதிக நேரம் செலவிடும் நாடுகள் குறித்து, ஆப் ஆனி (App Annie) நிறுவனம் ஆய்வு செய்தது. இதில், 'ஸ்மார்ட்போனில் சுறுசுறுப்பாக இயங்கும் இந்தியர்கள், ஷாப்பிங், விளையாட்டு போன்ற செயலிகளில் நாளொன்றுக்கு 4 மணி நேரத்துக்கும் அதிகமாக செலவிடுகின்றனர். ஸ்மார்ட்போனோடு குறைந்த அளவு புழங்கும் இந்தியர்கள் கூட, குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் செலவிடுகின்றனர்.' என்று தெரியவந்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடும் பயனர்கள் பட்டியலில், தென்கொரியா, மெக்சிக்கோ, பிரேசில், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம்பிடித்துள்ளது.