உள்ளூர் செய்திகள்

சென்னை வங்கியில் ரோபோ அறிமுகம்

வங்கிப் பணியில் ரோபோவை ஈடுபடுத்தும் முயற்சி, சென்னை வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சாஃப்ட் வங்கியில் (soft Bank) பணிபுரிவதற்காக, சமீபத்தில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவிலும் அதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக, சென்னை, தி.நகர், சிட்டி யூனியன் வங்கி கிளையில், ரோபோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த ரோபோவின் பெயர் லட்சுமி. இது, வங்கி ஊழியர்கள் நான்கு பேருக்கு இணையான பணியை செய்யும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு, 150 வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. * முதல் கட்டமாக வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான சந்தேகங்களுக்கு ரோபோ பதில் கொடுக்கும்.* பதில் தெரியவில்லை என்றால், 'வங்கி மேலாளரை அணுகவும்' என்று கூறும்.* இந்த முயற்சி வெற்றிபெற்றால், பண பரிவர்த்தனைச் சேவைகளுக்கும் ரோபோ பயன்படுத்தப்படும்.சோதனையில் லட்சுமி வெற்றி பெற்றால், தமிழகத்தில் மேலும் 25 கிளைகளில் ரோபோ சேவையை அறிமுகப்படுத்த, வங்கி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !