அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆபத்தா?
மூளை வீங்குதல் பிரச்னை தொடர்பாக ஆய்வுசெய்த, கனடா நாட்டின் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 'நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் 'சோடியம்' படிந்து இருக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும், இதயத் தசைகள் சரியாக இயங்கவும், ரத்தத்தில் சோடியத்தின் அளவு, லிட்டருக்கு 135--145 மில்லிமோல் இருக்க வேண்டும். அதிக தண்ணீர் அருந்தும்போது, அது உடலில் உள்ள தாதுஉப்புகளை நீர்த்துப்போகச் செய்கிறது. சோடியம் குறையும்போது, ஹைபோநேட்ரிமியா எனும் மூளை வீங்குதல் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.' என்று தெரிவித்துள்ளனர்.