உள்ளூர் செய்திகள்

விதைகளுக்கு சட்டம் உண்டா?

சட்டம் சொல்வது இதுதான்!விதைச் சட்டம் 1966 பிரிவு 6(அ)இன்படி, வெவ்வேறு வகையான விதைகளுக்குரிய குறைந்தபட்ச முளைப்புத்திறன் மற்றும் தூய்மைத் தரம் ஆகியவை அங்கீகரிக்கப்படுகின்றன. பிரிவு (பி) விதியின்படி, விதைப் பெட்டகத்துடன் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும்.பிரிவு 7இன்படி அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு வகை விதைகள் மற்றும் இரகங்களின் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுகிறது.விதை விற்பனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை* வகை மற்றும் இரகம் குறிப்பிட வேண்டும்* குறைந்தபட்ச முளைப்புத் திறன், புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை குறிப்பிடப்பட வேண்டும்* முழுமையான விவரங்களுடைய அடையாள அட்டை பொருத்தப்பட வேண்டும்* மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் குறிப்புரைகள் இருத்தல் வேண்டும்விதை விநியோகம் செய்பவர் கவனிக்க வேண்டியவை* காலக்கெடு முடிந்தபிறகு, விதை விற்பனை செய்த நபர்களின் எண்ணிக்கை* அடையாள அட்டையில் அனைத்துத் தகவல்களும் இருத்தல் வேண்டும்* விதை விநியோகம் செய்யும் அனைவரும் குவியல் வாரியாக தகவல்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு கடைபிடித்தல் வேண்டும். அனைத்துக் குவியல்களின் விதை மாதிரியை, ஓராண்டிற்கு இருப்பு வைத்திருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை இடத்திற்குச் சென்று, விதையின் தரத்தை ஆய்வு செய்வார்கள். விதையின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உடனே அதன் விதை மாதிரியை எடுத்து தரத்தை அறிய ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார்கள். அந்த விதை ஆய்வு முடிவின்படி, தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983இன் கீழ் விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விதை பற்றிய ஏதேனும் புகார்கள் வந்தால், அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.விதையின் தரத்தைப் பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்கு அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையத்திலிருந்து விதைகளை வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது, விதைப்பையில் உற்பத்தியாளர் அட்டையில் உள்ள கீழ்க்கண்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.* வ.எண்* பயிர்* இரகம்* குவியல் எண் (பயிரிடப்பட்ட இரகத்தின் குறிப்பிட்ட விதை அளவு. அந்த விதையின் வெளிப்புற அடையாளம் கண்டு அந்த இரகத்தினைக் கண்டுகொள்ள ஏதுவாக இருக்க வேண்டும்)* பரிசோதனை செய்யப்பட்ட நாள் (தேதி/மாதம்/ஆண்டு)* காலக்கெடு (தேதி/மாதம்/ஆண்டு)* முளைப்புத் திறன் சதவீதம் (குறைந்தபட்சம்)* புறச்சுத்தம் (குறைந்தபட்சம்)* இனத்தூய்மை (குறைந்தபட்சம்)* நிகர எடை* விதைநேர்த்தி செய்த மருந்து* உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரிவிதி மீறல்போலியான விதைகளை விற்றல், விதைச் சட்டம், விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதன்படி, அபராதம் மற்றும் ஏற்கெனவே இப்பிரிவில் தண்டிக்கப்பட்டவராக இருப்பின், சிறைத் தண்டனையும் உண்டு.தகவல்: agritech.tnau.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !