காதுகளால் கேட்டு உணரப்படும்
அதிர்வே ஒலி. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றில் ஒலி அலைகளை உருவாக்குகிறது. அதுவே நமக்குக் கேட்கும் சத்தம்.இயற்கையில் அல்லது செயற்கையாக உருவாகும் எல்லா ஒலிகளையும் டெசிபல் (Desibel = db) என்ற முறையில் அளக்கிறோம். ஆரோக்கியமான ஒருவரின் காதால் கேட்க முடிந்த மிகக் குறைந்த ஒலியை 0 டெசிபல் என்று குறிப்பார்கள். அதை விட 10 மடங்கு அதிக சத்தம் 10 டெசிபல் என்றும், நூறு மடங்கு அதிக சத்தம் 20 டெசிபல் என்றும், ஆயிரம் மடங்கு அதிக சத்தம் 30 டெசிபல் என்றும் குறிக்கப்படுகிறது.மனிதனின் கேட்கும் திறன் நொடிக்கு 16 அதிர்வுகள் முதல் 20000 அதிர்வுகள் வரை.16 அதிர்வுகள் / தாழ் ஒலி (Infrasonic)20000 அதிர்வுகள் / மிகை ஒலி (Ultra Sonic) ஒலியை அளக்கப் பயன்படும் அலகு டெசிபல் (Desibel) 0.000000000001 W/m2 என்பது ஒரு டெசிபல்டெசிபல்ஜெட் என்ஜினின் இயக்கம் - 140இடிச்சத்தம் - 120ரயில் சத்தம் - 80மனித உரையாடல் - 60அலுவலகச் சத்தம் - 30சாதாரண முணுமுணுப்புகள் - 20மனித சுவாசம் - 10பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. அதற்கும் மேலாக சத்தம் என்றால், அதை நாம் கேட்கும் நேரம் குறைவாக இருந்தால் தப்பிக்கலாம். 90 டெசிபல் சத்தத்தை எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும். அதுவே 140 டெசிபல் என்றால் சில விநாடிகள் கேட்டாலே போதும்... பாதிப்பு நிச்சயம்.