உள்ளூர் செய்திகள்

ஜம்புத் தீவு..?

திருச்சி கோட்டையில் 1802ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ஓர் அறிக்கை ஒட்டப்படுகிறது. 'ஜம்புத் தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும்…' என்று அந்த அறிக்கை ஆரம்பமாகிறது. ஜம்புத் தீவின் அனைத்துக் குடிமக்களுக்குமான அறிவிப்பு அது. அது மிகத் தீவிரமான வார்த்தைகளால் ஐரோப்பிய வெள்ளையர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்தியது. அறிக்கையின் கடைசிப் பத்தி், 'இந்த அறிக்கையை சுவரிலிருந்து எடுக்கிறவன் பாவியாகக் கருதப்படுவான்' என முடிகிறது. இப்படிக்கு என்று மருதுபாண்டியன் என்கிற பெயர்.அப்படியானால்… ஜம்புத் தீவு என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டீர்கள். சிவகங்கைச் சீமையின் சின்னமருது ஒட்டிய இந்த அறிக்கை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் 'ஜம்புத்தீவு பிரகடனம்' என அழைக்கப்படுகிறது. இந்த அறிக்கையை ஜூன் 16ல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகிறார்கள். அதையடுத்து மருது சகோதரர்களை கைது செய்து 1801 அக்டோபர் 24ல் தூக்கிலும் போட்டுவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !