உள்ளூர் செய்திகள்

மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து

கரிசலாங்கண்ணிஆங்கிலப் பெயர்: 'ஃபால்ஸ் டெய்சி' (False Daisy)தாவரவியல் பெயர்: 'ஈக்லிப்டா புரோஸ்ட்ராட்டா' (Eclipta Prostrata)வகைகள்: வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணிவேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடிகரிசலாங்கண்ணி, 'அஸ்டெராசியே' (Asteraceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த குறுஞ்செடி இனம். மூலிகைச் செடியான இது, தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் ஈரப்பதமுள்ள நிலத்தில் நன்கு வளர்கிறது. வயல் வரப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இந்தச் செடியைக் காணலாம். செடியாகவும், தரையோடு படர்ந்து கொடியாகவும் வளரும். எதிர் அடுக்கில் அமைந்த தடிமனான பச்சை நிற இலைகளை உடையது. வெள்ளை நிறத்தில் பூக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் நிறத்தில் பூக்கும். விதைப் பரவல் மூலம் இந்தச் செடி இனப்பெருக்கம் ஆகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தச் செடியின் இலைகள் பழங்காலம் முதலே, இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கீரையாக சமைத்தும் உண்ணலாம்; இரும்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மஞ்சள் காமாலை, ஆஸ்த்மா, சளி, சருமப் பிரச்னை, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றிற்கு இது மருந்தாக உதவுகிறது. - கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !