இனிய சந்திப்பு!
காலநிலை பாதுகாப்பை வலியுறுத்தி, பிரிட்டனில் பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், கிரேட்டா தன்பெர்க் கலந்துகொண்டார். அவ்விடத்திற்கு அருகில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பெண்கல்விக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த மலாலா யூசுப் இருப்பதையறிந்த கிரேட்டா, அங்கு சென்று அவரையும் சந்தித்தார். இளம்போராளிகள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.