கண்ணா மூச்சு நிலா!
ஆகாயத்தில் கரங்கள் வீசிஅழகு நிலா நடக்குதுஅகிலத்து உயிர்கள் எல்லாம்அண்ணாந்து வியக்குதுபகலில் அதிக பணிச்சுமைபோல்பளிங்கு முகம் மறைக்குதுஇரவு முழுக்க ஓடிஓடிஒளியை வாரி இறைக்குதுசிலநாட்கள் முகம் சுருங்கிசின்னதாகத் திரியுதுஅதிலும் கூட ஒருநாளில்அருவமாகிப் போகுது மேகக் கதவில் ஒளிந்தொளிந்துகண்ணா மூச்சு ஆடுதுயாரும் நெருங்க முடியாமல்விண்மீனால் தடுக்குதுஆறு குளம் கிணற்றிலேஇறங்கி நெருங்கி வருகுதுஅன்புக் கரம் நீட்டினாலோகலங்கி தளும்பி ஓடுது