உள்ளூர் செய்திகள்

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மஞ்சு: ஏன் சாந்தி மழைல நனையுற. சளி புடிச்சுக்கும். மரியாதையா குடைக்குள்ள வா. சாந்தி: அடப்போடி. எப்பவாவதுதான் இந்த மழையே வருது. கொஞ்ச நேரம் நனையலாம்ன்னு பாத்தா விடமாட்டியே...ம: இப்படியே நனைஞ்சுகிட்டே இரு. பாக்டீரியா, வைரஸ், நாக்குப் பூச்சி அது இதுன்னு ஏதாச்சும் பரவி, காய்ச்சல் வரப் போகுது பாரு.சா: நீ இதுக்கெல்லாம் பயந்துகிட்டு இரு மஞ்சு. அமெரிக்கா விஞ்ஞானிகள் மழையை வரவழைக்கிற பாக்டீரியாவையே கண்டுபிடிச்சிருக்காங்களாம்! ம: மே மாசமே முடியப் போகுது. இப்ப வந்து ஏப்ரல் ஃபூல் பண்ணுறியா? சா: யாரையும் ஃபூல் பண்ணல. தாவரங்கள்ல வளரும் அந்த பாக்டீரியாக்கள் காற்று வழியாக மேகத்துக்குச் சென்று ஐஸ்கட்டியாகி குறிப்பிட்ட வெப்ப நிலைல மழையாப் பொழியும்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!ம: ஓ! அப்படின்னா ஃபர்ஸ்ட் அந்த பாக்டீரியாக்கள வச்சு வறண்டு கிடக்குற நம்ம தாத்தா ஊர்ல அளவில்லாம ரொம்ப மழை பெய்ய வைக்கணும்!சா: அளவில்லாம எப்படி? மழையை அளக்குறதுக்குத்தான் மழைமானி இருக்கே!ம: வானத்துல இருந்து விழுற மழையை அளக்க முடியுமா? அவ்ளோ பெரிய ஸ்கேலா அந்த மழைமானி?சா: ஸ்கேல் மாதிரி இல்ல. உருளையா இருக்குற மழைமானிக்கு உள்ளே ஒரு புனல் (funnel) இருக்கும். அதுல 0 மி.மீ. முதல் 25 மி.மீ. வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.ம: இது எப்படி மழையை அளக்கும்? எனக்குப் புரியலையே...சா: மழை பெய்யும்போது மழைமானியைத் திறந்து வைக்கணும். சரியா, 24 மணி நேரத்துக்கு அப்புறமா அதில் சேர்கிற நீரை மில்லி மீட்டரில் அளவு எடுத்துக் கணக்கிட்டால் எவ்வளவு மழை பெஞ்சதுன்னு தெரிஞ்சுக்கலாம்.ம: இதுக்கு ஏன் இவ்ளோ கஷ்டப்படணும். என்கிட்ட கேட்டா அளக்காமலே நான் சொல்லுவேன். இது சின்ன மழை, போன வாரம் பெஞ்சது பெரிய மழை, போன வருசம் பெஞ்சது ரொம்பப் பெரிய மழை...சா: நீ அதெல்லாம் சொல்ல வேணாம். 'துப்பார்க்குத் துப்பாய' அப்படின்னு மழை சம்பந்தமா ஒரு திருக்குறள் இருக்கே, அதச் சொல்லு பாக்கலாம்.ம: இதோ வரேம்மா. அம்மா கூப்பிடுற மாதிரி இருக்கு. வெயிட் பண்ணு சாந்தி! போய்ட்டு வந்து குறள் சொல்றேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !