மக்கள் தலைவர்!
ஜான் எஃப்.கென்னடி 29.5.1917 - 22.11.1963மசாசூசெட்ஸ், அமெரிக்காதன் பேச்சாலும் தோற்றத்தாலும் உலக மக்களைக் கவர்ந்தவர்; போரைத் தவிர்த்ததற்காகக் கொண்டாடப்பட்டவர்; எப்போதும் நினைவுகூரப்படும் அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜான் எஃப். கென்னடி!ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அமெரிக்க கடற்படையில் அதிகாரி ஆனார். இரண்டாம் உலகப் போரில் இவர் தலைமையிலான கப்பலை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கியது. காயம்பட்ட நிலையிலும் துணிந்து தன் வீரர்களைக் காப்பாற்றியதால் 'பர்பிள் ஹார்ட்' என்ற வீரப்பதக்கம் அவருக்குக் கிடைத்தது. போருக்குப் பிறகு தீவிர அரசியலில் நுழைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க கீழவை உறுப்பினராகவும் செனட் உறுப்பினராகவும் இருந்தார். இதைத் தொடர்ந்து 1960இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபர் ஆனார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கென்னடியின் நடவடிக்கைகளால் அமெரிக்கா பொருளாதார எழுச்சி பெற்றது. இவரது ஆட்சியில் விண்வெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறியது. கியூபா ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் பிரச்னை, அமெரிக்கக் குடியுரிமை விவகாரம், வியட்நாம் போர் ஆரம்பம் என பல முக்கிய நிகழ்வுகள் இவரது ஆட்சிக் காலத்தில் நடந்த போதும், எல்லாவற்றையும் சரியாக எதிர்கொண்டார்.மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவருக்கு வயது 46. இவரது 'Profiles in courage' என்ற நூலுக்கு 1957இல் 'புலிட்சர்' பரிசு கிடைத்தது.