கனவுலகூட பாடமா வருது!
இன்றைய மாணவர்களில் பலருக்கும் பெரிய சங்கடம், வீட்டுப்பாடம். தினமும் பள்ளியில், தனி வகுப்புகளில் படிப்பது தவிர்த்து, வீட்டிலும் கையொடிய எழுத வேண்டியதிருக்கிறது என்ற அங்கலாய்ப்பு அதிகமாகக் கேட்கிறது. அவர்களின் குரலாகவே, வீட்டுப்பாடம் தேவையா? பள்ளியில் படித்தால் போதாதா? என கேட்டிருந்தோம். கடலுார், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். இதோ அவர்களின் கருத்துகள்:-சமீஹா - 6ஆம் வகுப்புஹோம் ஒர்க் கொடுப்பது தவறில்லை. அதே சமயம் அதிகமாக ஹோம் ஒர்க் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கணக்குப் பாடத்திற்கு மட்டும் அதிக நேரம் ஹோம் ஒர்க் கொடுக்கின்றனர். இதனால், மற்ற பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எல்லா பாடங்களுக்கும் ஒரே அளவு கொடுத்தால் தவறில்லை. பவன்ராஜ் - 10ஆம் வகுப்புகாலை முதல் மாலை வரை, பள்ளியில் அதிக நேரம் செலவிட்டுப் படிப்பதால் பாடம் சார்ந்த விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும். இதனால், ஹோம் ஒர்க் என்று தனியாக எதுவும் தேவையில்லை. எல்லோரும் ஹோம் ஒர்க் செய்துள்ளார்களான்னு பார்க்குறதில்லை. பார்த்தாலும் யார் செய்தார்கள் என்பதை ஆசிரியர்கள் கேட்பதில்லை. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் அதைச் செய்தார்கள் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை. அப்படி இருக்க எதுக்கு இந்தச் சுமை?பிரீத்தி - 6ஆம் வகுப்புஎல்.கே.ஜி.யில தொடங்கி 12ஆம் வகுப்பு வரை, ஹோம் ஒர்க் கொடுக்குறாங்க. அதுவும் திரும்பத்திரும்ப பாடம் பற்றியே தான் கேட்டுட்டு இருக்காங்க. கனவுலகூட பாடமா வருது. இப்பெல்லாம் புத்தகம்னாலே எனக்கு பயமாக இருக்கு. நிச்சயமா இந்த வீட்டுப்பாடத்திற்குத் தடை வரணும்.இரஞ்சித்குமார் - 12ஆம் வகுப்புஇன்றைய காலகட்டத்தில் வீட்டுப்பாடம் தேவையான ஒன்றுதான். பள்ளியில் படித்ததை வீட்டிற்குச் சென்று ஹோம் ஒர்க் செய்வதால் மீண்டும் படிக்கிறோம். இதுவே தேர்வுக்குத் தயாராவதற்கு எளிதாக இருக்கிறது.மானிஷா - 12ஆம் வகுப்புபள்ளியில் பாடம் நடத்துகிறோம்னு பெற்றோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஹோம் ஒர்க் கொடுக்கிறார்களோன்னு தோணுது. ஹோம் ஒர்க்கிற்கு அதிகநேரம் கொடுப்பதால், விளையாடக்கூட நேரம் இல்லாமலே போகிறது. இதனால், படிப்பின் மீதான ஆர்வம் படிப்படியாகக் குறைவதுடன் கவனமும் சிதறுகிறது. நடனம், இசைப் பயிற்சியில் தனித்திறமையை வெளிக்கொண்டு வரவும் முடியவில்லை. பிரியதர்ஷினி - 10ஆம் வகுப்புஹோம் ஒர்க் கொடுப்பது தேவையான ஒன்றுதான். அதற்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருப்பதுபோல கொடுக்கக்கூடாது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரமே கிடைப்பதில்லை. பெற்றோர், நண்பர்களிடம் நிம்மதியாக உட்கார்ந்து பேசக்கூட முடியவில்லை.