சுண்டெலியும் எறும்பும்
குட்டிக் குட்டி சுண்டெலிஎட்டி எட்டிப் பார்த்ததுதட்டில் கொட்டிக் கிடந்ததாம்பொட்டுக்கடலை ஈர்த்ததுதத்தித் தத்தி நடந்ததுதட்டுக் கிட்டேவந்ததுபொட்டுக் கடலை எடுத்ததுமெல்ல மெல்லக் கொறித்தது.பூனைச் சத்தம் கேட்டதுபொந்து உள்ளே ஒளிந்ததுபூனை போகும் வரையிலும்பொறுமையாக இருந்தது.பொட்டுக்கடலைத் தட்டுக்குஎறும்பு ஒன்று வந்ததுகடலை ஒன்ளறத் தூக்கியேபொந்துப் பக்கம் போனது.எறும்பு எடுத்துப் போனதைஎலியும் பறித்துக் கொண்டது.திரும்ப எறும்பு வந்ததுமற்றதைச் சுமந்து போனது.அதையும் எலி யார் பிடுங்கியதுஅந்த எறும்பு அழுதது.பார்த்திருந்த பூனையும்சிரித்தபடி சொன்னது:நறுக்கெனக் கடிக்க நானுனக்குசொல்லித் தரவும் வேணுமோ?சுருக்கென வலிக்க, சுண்டெலியும்சுட்டித்தனம்தான் செய்யுமோ?- கீதாமதி