உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த நிறுவனங்களில் நாசா ஆய்வு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப, ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. அவற்றின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்ய பரிசோதனைகளை மேற்கொள்ளப் போவதாக நாசா அறிவித்துள்ளது. போதைப் பொருள் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைப் பரிசீலிக்க உள்ள இந்த மதிப்பீட்டு ஆய்விற்குப் பின்னரே அடுத்தகட்ட பரிசோதனைகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், போதைப் பொருள் உபயோகிக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியானதே இந்நடவடிக்கையின் பின்னணி என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !