இயல்பான இயற்பியல் - ஒரே விடை தான்!
* தரையில் நடக்கும் போது கீழே விழாமல் நடக்கிறோம். ஆனால், நீரின் மேற்பரப்பில் அவ்வாறு நடக்க முடிவதில்லை, ஏன்?* ஒரு பொருள் தேய்மானம் அடையக் காரணம் என்ன?* வெப்பத்தை உருவாக்கும் ஒரு வகையான விசை அது! * ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும்போது, அந்த இரண்டு பொருட்களின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் விசை எது?என்ன கண்டுபிடித்து விட்டீர்களா? இன்னொரு க்ளூ! * வாகனங்கள் சாலையில் பயணம் செய்ய பக்கபலமாக இருப்பதும் இந்த விசையே.அது என்ன விசை?விடை: உராய்வு விசை