நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவராக இருந்த எஸ்.பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள முதல் பெண் அதிகாரி யார்?அ. சந்திராஆ. சித்ராஇ. அமுதாஈ. கல்யாணி2. அமெரிக்க நாட்டின் தேசிய அலுவல் மொழியாக எதை, அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்?அ. ஸ்பானிஷ்ஆ. ஆங்கிலம் இ. கொரியன்ஈ. அரபிக்3. உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகள் விழாவில், சிறந்த திரைப்படம் உட்பட எத்தனை விருதுகளை, ஹாலிவுட் படமான, 'அனோரா' பெற்றுள்ளது?அ. நான்குஆ. இரண்டுஇ. மூன்றுஈ. ஐந்து4. கடந்த 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?அ. அமெரிக்கா ஆ. இந்தியாஇ. சீனாஈ. ஜப்பான்5. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் தொடங்கப்பட்டு உள்ள, தேசிய மஞ்சள் வாரியத்தின் முதலாவது செயலராக, மத்திய வர்த்தகத்துறையால் நியமிக்கப்பட்டுள்ள, தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்?அ. யுவஸ்ரீஆ. தேஜாஸ்ரீஇ. பவானிஸ்ரீஈ. கவிதா6. உலகளவில் அதிக சொத்து மதிப்புள்ள தனி நபர் கொண்ட நாடுகளில், 85,698 பேருடன் இந்தியா எந்த இடத்தில் உள்ளதாக, 'நைட் பிராங்க்' என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது?அ. முதலாவதுஆ. ஆறாவதுஇ. மூன்றாவதுஈ. நான்காவது7. 'எங்கள் நாட்டின் மீது நியாயமற்ற முறையில் அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது, பரஸ்பர வரி விதிப்பை நாங்கள் மேற்கொள்வோம்' என, எந்த நாட்டின் அதிபர் தெரிவித்து உள்ளார்?அ. விளாடிமிர் புடின், ரஷ்யாஆ. டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இ. இமானுவல் மேக்ரான், பிரான்ஸ்ஈ. ஆசிஃப் அலி சர்தாரி, பாகிஸ்தான்8. இந்தியாவின் 'நம்பர் - 1' டேபிள் டென்னிஸ் வீரரான யார், சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்?அ. ஹர்மீத் தேசாய்ஆ. மனிகா பட்ராஇ. சரத் கமல் ஈ. மானவ் தக்கார்விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. இ, 6. ஈ, 7. ஆ, 8. இ.