நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்தியாவின் எந்த மாநில அரசு, தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு, சமஸ்கிருதம் பேசக் கற்றுத் தருவதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என, அறிவித்துள்ளது?அ. மத்தியப்பிரதேசம்ஆ. உத்தரகாண்ட்இ. தெலங்கானாஈ. பீகார்2. தமிழக அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, அரசு சார்பில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பெயர் என்ன?அ. அப் கிரேடுஆ. இங்கிலீஷ் கிளாஸ்இ. லெவல் அப் ஈ. ஸ்கில் டெவலப்3. 'ஆபரேஷன் சிலந்தி வலை' என்ற பெயரில், எந்த நாட்டின் மீது உக்ரைன், சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது?அ. அமெரிக்காஆ. சீனாஇ. ஈரான்ஈ. ரஷ்யா4. அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அனலீனா போர்பாக், எந்த ஐரோப்பிய நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராவார்?அ. ஜெர்மனிஆ. ஸ்பெயின்இ. இத்தாலிஈ. நெதர்லாந்து5. ஐரோப்பிய நாடான எந்த நாட்டின் அதிபர் தேர்தலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளரான, பழமைவாத கட்சியின் கரோல் நவ்ரோக்கி வெற்றி பெற்றுள்ளார்?அ. டென்மார்க்ஆ. போலந்துஇ. பிரான்ஸ்ஈ. பல்கேரியா6. மத்திய கல்வி அமைச்சகம், 'உல்லாஸ் நவபாரத்' எனும் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடத்திய, அடிப்படை கல்விக்கான எழுத்து, எண் அறிவு மதிப்பீட்டுத் தேர்வில், எந்த மாநிலம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது?அ. கேரளம்ஆ. அசாம்இ. சிக்கிம்ஈ. தமிழகம் 7. தென் அமெரிக்க நாடான எதன் அதிபர் சாண்டியாகோ பெனா, இந்தியாவின் வந்தே பாரத் ரயில்களை வாங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்?அ. பெருஆ. உருகுவேஇ. பராகுவே ஈ. பொலிவியா8. தென்கொரியாவில் நடந்த 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்தது?அ. முதலாவதுஆ. இரண்டாவதுஇ. மூன்றாவதுஈ. நான்காவதுவிடைகள்; 1. ஆ, 2. இ, 3. ஈ, 4. அ, 5. ஆ, 6. ஈ, 7. இ, 8. ஆ.