நான்கில் ஒன்று சொல்!
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. அமெரிக்காவின் எந்த நகரம், ஆண்டுதோறும் குளிர்காலத்தில், 64 நாட்களுக்குத் துருவ இரவு காலத்தில் இருப்பதால், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைப் பார்க்காது?அ. சிகாகோஆ. உக்டியாக்விக்இ. ஹுஸ்டன்ஈ. பீனிக்ஸ்2. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பெண்கள் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவர்கள் 24 மணி நேரமும், எந்த இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என, தேசிய பெண்கள் கமிஷன் அறிவித்துள்ளது?அ. 15000ஆ. 12250இ. 13500ஈ. 14490 3. 'கிரியா' எனப்படும், தூய்மையான காற்று மற்றும் ஆற்றலுக்கான ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், இந்தியாவின் எந்தப் பகுதியில், காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது?அ. பெங்களூரூஆ. சென்னைஇ. டில்லி ஈ. மும்பை4. இந்தியாவில், தனியார் நிறுவனம் சார்பில் முதன்முறையாக, புவி சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ராக்கெட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பெயர் என்ன? அ. விக்ரம் 1 ஆ. எஸ்.எல்.வி. 3இ. ரோகினி 2ஈ. ஆர்.எல்.வி. 45. இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த புத்தகம் சமீபத்தில், எத்தனை பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது?அ. ஐந்துஆ. ஒன்பது இ. ஆறுஈ. எட்டு6. மும்பையில் நடந்த இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை?அ. தீபிகா பல்லிகல்ஆ. தன்வி கன்னாஇ. அனாஹத் சிங் ஈ. ஜோஷ்னா சின்னப்பாவிடைகள்:1. ஆ,2. ஈ,3. இ,4. அ,5. ஆ,6. இ.