10 கோடி ரூபாய்க்கு விலைபோன புறா!
அர்மாண்டோ (Armando), பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த புறா. இது கடைசியாக, தான் கலந்துகொண்ட மூன்று பந்தயங்களிலும் வெற்றி வாகை சூடியது. இப்படியான பந்தயப் புறாக்களை ஏலத்தில் விடும் நிறுவனம் பிபா (PIPA Pigeon Paradise), அர்மாண்டோவை விற்க முயற்சித்தது. அந்நிறுவனமே எதிர்பாராதபடி, மிக அதிகத் தொகைக்கு ஏலம் போய் இருக்கிறது அர்மாண்டோ. ஆம், 1.25 மில்லியன் யூரோவுக்கு (10 கோடி ரூபாய்) ஏலத்தில் விலை போயுள்ளதன்மூலம், அர்மாண்டோ புதிய சாதனையைச் செய்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக ஒரு புறா 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டதே பெரிய சாதனை. திடீரென அர்மாண்டோ எதிர்பாராத தொகைக்கு ஏலம் போயிருப்பது, பெல்ஜியவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.