உள்ளூர் செய்திகள்

மொழிபெயர்ப்பில் முன்னேற்றம்

டிரான்ஸ்லேட்டோட்ரான் என்ற புதிய மொழிபெயர்ப்பு மாடலை கூகுள் உருவாக்கி வருகிறது. இதன்மூலம் ஒருவருடைய உரையாடலை, இன்னொரு மொழிக்கு, அவருடைய குரலிலேயே மாற்றலாம். இதில், ஒருவரின் உரையை எழுத்தாக மாற்றி, பின் மீண்டும் புதிய மொழியில் உரையாக மாற்றுவதற்குப் பதிலாக புதிய முறை பின்பற்றப்படுகிறது. ஸ்பெக்டோகிராம் என்னும் முறையில் நேரடியாக, உரையாற்றியவரின் குரலிலேயே மொழிபெயர்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !