மழைக் காட்சி
பெய்தாலும் பேச வைக்கும். பொய்தாலும் பேச வைக்கும். அதுதான் மழை. இந்த வெயிலுக்குக் குளிர்ச்சியாக ஒரு சந்தப்பாட்டு உங்களுக்காக... இப்போது உங்கள் ஊரில் மழை பெய்தால், வெளியில் நீங்கள் பார்க்கும் காட்சியையும் இந்தப் பாட்டின் வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு!மழைவரும் போலமேகங்கள் சூழவானம் மிரட்டியதுகறுப்பு மேகம்சறுக்கிப் போககாற்று விரட்டியது'ஹோ' என்ற இசையைபேய்க் குரல் காற்றுசங்காய் ஊதியதுபயந்த முகிலினம்ஒன்றோடொன்றாய்தனக்குள் மோதியதுமேக்ஙகள் உரசிதீப்பிடித்தது போல்மின்னல் தோன்றியதுவளைந்து நெளிந்துவௌ்ளிக் கோல்களைவானில் ஊன்றியதுநீலத் திரையில்வௌ்ளைக் கோடுகள்ஓவியம் தீட்டியதுசித்திரம் முடிந்தபின்னே இடிதான்அச்சம் காட்டியதுகாற்று குளிர்ந்துசில்லென்றாகிமேகம் நடுங்கியதுவானம் கிழிந்தமழையால்,குளிரால்உலகம் ஒடுங்கியதுபூமியில் உயிர்கள்பிழைக்க மேகம்மழையாய்ப்பெய்கிறதுஅதற்குள் இடியும்மின்னலுமாய் ஏன்குறும்பு செய்கிறது?- ரமேச்சு