தாயகம் திரும்பும் கலைப்பொருட்கள்
அமெரிக்க நிறுவனமான ஹாபி-லாபி (Hobby Lobby), 5,500 புராதன கலைப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம், பழைய கலைப்பொருட்களை விற்பனை செய்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்காலத்து கலைப் பொருட்களை, இப்போது உரியவர்களிடம் வழங்க முன்வந்துள்ளது.கியூனிஃபார்ம் (cuneiform) எனும் புராதன மொழியில் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் (tablets) உள்ளிட்ட பல்வேறு அபூர்வமான கலைப்பொருட்கள், ஈராக் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு இந்த நிறுவனத்தை வந்தடைந்தன.ஹாபி லாபி நிறுவனத் தலைவர் ஸ்டீவ் கிரீன் (Steve Green) “நாங்கள் ஒருபோதும் சட்டவிரோதமான செயல்களை ஊக்குவிப்பதில்லை” என்று கூறியுள்ளார்.