சர்தார் சிங்கிற்கு ஓய்வு
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், வரும் ஜூன் 10ல் இருந்து 17 வரை லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்தது. இதில் 'ரெகுலர்' கேப்டன் சர்தார் சிங்கிற்கு ஓய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அணியை வழி நடத்த உள்ளார். துணை கேப்டனாக சுனில் அறிவிக்கப்பட்டுள்ளார். ரகுநாத், ஆகாஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன் நடக்கவுள்ள கடைசி தொடர் இதுதான்.