நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. தமிழகத்தில் மக்கள்தொகை எவ்வளவு கோடியைத் தாண்டியுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்?அ. 9 கோடிஆ. 8.50 கோடிஇ. 8.04 கோடிஈ. 6 கோடி2. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில்,15 ஆண்டுகளில், எவ்வளவு கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு, மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுத் தெரிவித்துள்ளது?அ. 35.40 கோடிஆ. 41.50 கோடிஇ. 40.02 கோடிஈ. 50.20 கோடி3. பெங்களூருவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி ஆதியா, சமீபத்தில் மிக உயரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த மலைச்சிகரம், எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது?அ. ஆப்பிரிக்காஆ. ஆன்டார்டிகாஇ. ஆஸ்திரேலியாஈ. தென் அமெரிக்கா4. இந்தியாவில், கடந்த 2018 - 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, ஜவுளி ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?அ. குஜராத்ஆ. ராஜஸ்தான்இ. கர்நாடகம்ஈ. தமிழகம்5. மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, சமீபத்தில் எந்த இரு பொருட்களுக்கு, கட்டாயத் தரக்கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது?அ. மிக்சி, கிரைண்டர்ஆ. வாஷிங் மெஷின், பிரிஃட்ஜ்இ. குடிநீர் பாட்டில், லைட்டர்ஈ. வாட்டர் ஹீட்டர், ஏ.சி.6. சென்னையில், 20 ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்த, எந்த வகையான பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது?அ. டீலக்ஸ்ஆ. டபுள் டெக்கர்இ. எலெக்ட்ரிக்ஈ. டிரெய்லர்7. தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர், 10,000 மீ. நடைப் பந்தயத்தில், இந்தியாவின் அபிஷேக் பால் வென்ற பதக்கம்?அ. வெண்கலம்ஆ. தங்கம்இ. வெள்ளிஈ. பிளாட்டினம்விடை: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. ஆ, 7. அ.