மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகைபெற, வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், இளநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ. 7,500;பிளஸ்- 2, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ. 6,000 வழங்கப்படும். சிறப்புக் குழந்தைகளின் (மூளை முடக்குவாதம், ஆட்டிசம், கற்றல்குறைபாடு) கல்விக்காக தலா ரூ. 5,000 வழங்கப்படும்.விண்ணப்பப் படிவங்களைப் பெற, மாணவரின் சுய முகவரி எழுதப்பட்ட, ரூ.5 தபால் தலை ஒட்டிய கவருடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: நிர்வாக இயக்குனர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புதிய எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையார், சென்னை - 600020.