உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வகுத்தார். உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை 1859இல் வெளியிட்டார். உயிரினங்கள் தொடர்பாக அதுவரை இருந்த சிந்தனைகளை, புதிய கோணத்தில் மாற்றியமைத்தார்.பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்அமெரிக்காவின் 16வது அதிபராக 1860இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, இனவெறிக் கொடுமையை நேர்மையான செயற்பாடுகளால் ஒழித்தார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863இல் வெளியிட்டார்.பிப்ரவரி 13, 1985 - சோம்தேவ் தேவ்வர்மன் பிறந்த நாள்இந்திய டென்னிஸ் வீரர். அமெரிக்க தேசியக் கல்லூரி விளையாட்டுக் கழகத்தின் ஒற்றையர் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்று புகழ்பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு, பத்மஸ்ரீ விருதை இந்த ஆண்டு அறிவித்துள்ளது.பிப்ரவரி 13, 2012 - உலக வானொலி நாள்ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ இந்த நாளை அறிவித்தது. பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலிகள் மூலமாகத் தகவல்கள் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.பிப்ரவரி 15, 1564 - கலிலியோ கலிலி பிறந்த நாள்நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை. தான் கண்டறிந்த தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்துக்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்துக்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். 'பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன' என்ற நிகோலஸ் கூற்றையும் ஆய்வுகள் மூலம் விளக்கினார்.பிப்ரவரி 18, 1745 - அலெசாண்ட்ரோ வோல்ட்டா பிறந்த நாள்முதல் மின்கலத்தை உருவாக்கி 'மின்துறை' உருவாகக் காரணமான இயற்பியலாளர். மீத்தேன் வாயுவையும் கண்டறிந்தார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, மின் அழுத்த அலகுக்கு 'வோல்ட்', மின் அழுத்தத்தை அளக்கும் கருவிக்கு வோல்ட்மீட்டர் (Voltmeter) எனக் குறிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !