உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

மார்ச் 15, 1963: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்நுகர்வோருக்கென பல அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது குறைகளைத் தீர்க்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மார்ச் 16, 1955: தேசிய தடுப்பூசி நாள்குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கவும், தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.மார்ச் 16, 1750: கரோலின் ஹெர்ச்செல் பிறந்த நாள்ஜெர்மன் வானியலாளர். வானியல் அறிஞர் வில்லியம் ஹெர்ச்செலின் தங்கை. இருவரும் வானியலில் புரட்சியை உண்டாக்கினார்கள். சில வால்மீன்களையும் கண்டுபிடித்தார் கரோலின்.மார்ச் 17, 1962: கல்பனா சாவ்லா பிறந்த நாள்இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை. விண்வெளிப் பயணம் முடித்து தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். வீரதீர சாகசங்கள் புரியும் பெண்களுக்கு, இவரது பெயரில் இந்திய அரசு விருது வழங்கி வருகிறது.மார்ச் 18, 1858: ருடால்ஃப் டீசல் பிறந்த நாள்தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார். நீராவி இன்ஜினுக்கு மாற்றாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' இன்ஜினைக் கண்டுபிடித்தார். அதற்கு 'டீசல்' என்கிற அவர் பெயரே நிலைத்துவிட்டது. மார்ச் 17, 1990: சாய்னா நேவால் பிறந்த நாள் இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முதல் இந்தியர் என்ற பெயரை 2012இல் பெற்றார். 2015இல் 'நம்பர்- 1' இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !