உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

மே 22, 1992 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்மனிதர்களாகிய நமக்கு பூமியில் வாழ உரிமை இருப்பது போல, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கிறது. உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.மே 22, 1772 - ராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள்கல்வியாளர், சிந்தனையாளர். உடன்கட்டை ஏறும் பழக்கத்துக்கு எதிராகப் போராடி, பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை நிறுவி, சாதி, மத, சமூக சீர்திருத்தங்களுக்காக உழைத்தார்.மே 23, 2000 - உலக ஆமைகள் நாள்ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஆமைகள், நீரிலும் நிலத்திலும் வாழும். 300 வகையான ஆமையினங்கள் உள்ளன. விரைவாக அழிந்து வருகிற ஆமை இனங்களைப் பாதுகாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.மே 24, 1819 - விக்டோரியா மகாராணி பிறந்த நாள்பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி. 1876 முதல் 1901 வரை ஆட்சி செய்தார். 'ஐரோப்பாவின் பாட்டி' என்று மக்கள் அழைத்தனர். இவரது ஆட்சியின் ஒரு பகுதி, 'விக்டோரியா காலப்பகுதி' என அழைக்கப்படுகிறது.மே 25, 2001 - சர்வதேச காணாமல்போன குழந்தைகள் நாள்சர்வதேச அளவில் சராசரியாக ஒரு நாளில் 22 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களையும் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.மே 27, 1962 - ரவி சாஸ்திரி பிறந்த நாள்இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர். துணைக் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். 1994இல் ஓய்வுபெற்றபிறகு, கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனார். அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !