உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

டிசம்பர் 3, 1795 - ரோலண்ட் ஹில் பிறந்த நாள்நவீன அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டு ஆசிரியர். இவரது யோசனைப்படியே, தபால் வாங்கி அதில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.டிசம்பர் 3, 2012 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை உலக மக்கள் உணர வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை சம அளவில் வழங்க வலியுறுத்தி இந்த நாளை ஐ.நா. கடைப்பிடிக்கிறது.டிசம்பர் 4, 1971 - இந்திய கடற்படையினர் நாள்இந்தியக் கடற்படை, 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் பாகிஸ்தானின் கராச்சி மீது தாக்குதல் நடத்தி போரில் வெற்றி பெற்றது. இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.டிசம்பர் 5, 1901 - வால்ட் டிஸ்னி பிறந்த நாள்கேளிக்கை உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். இவரது 26 படங்கள் ஆஸ்கார் விருது வென்றுள்ளன.டிசம்பர் 7, 1949 - கொடி நாள்இந்தியாவின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்ற, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கொடி விற்பனையின் மூலம் திரட்டப்படும் நிதி வீரர்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 9, 2003 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்ஒரு நாட்டின் வளர்ச்சியையும் ஆட்சியையும் பாதுகாப்பையும் சீரழிப்பதாக ஊழல் இருக்கிறது. இதைத் தடுக்க ஐ.நா. அமைப்பு தீர்மானத்தை நிறைவேற்றி இந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !