தேதி சொல்லும் சேதி
ஆகஸ்ட் 19, 1871 - ஆர்வில் ரைட் பிறந்த நாள்அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். ரைட் சகோதரர்களில் மூத்தவர். முதன்முதலாக விமானத்தை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அவர்கள் கண்டுபிடித்த விமானம் வாஷிங்டன் தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 19, 1839 - உலகப் புகைப்பட நாள்டாகுரியோடைப் புகைப்பட முறையை லூயிஸ் டாகுரே அறிமுகப்படுத்தினார். இதற்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்து 'ஃப்ரீ டூ தி வேர்ல்ட்' என அறிவித்தது. புகைப்படக்கலையின் பெருமையை உணர, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்தநாள்இந்தியாவின் 6வது பிரதமராக இளம் வயதிலேயே (40 வயது) ஆனார். இந்த நாள் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு, கல்வி நிறுவனங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.ஆகஸ்ட் 21, 1986 - உசேன் போல்ட் பிறந்த நாள்தடகளப் போட்டியின் 'மின்னல் மனிதன்'. 2008இல் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தூரத்தை 9.69 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார். 'சிறந்த உலக விளையாட்டு வீரர்' என்கிற பட்டத்தையும் பெற்றுள்ளார்.ஆகஸ்ட் 22, 1907 - ப.ஜீவானந்தம் பிறந்த நாள்பொது வாழ்வில் 40 ஆண்டுகள் ஈடுபட்ட பொதுவுடைமைத் தலைவர். 'ஜீவா' என, அனைவராலும் அழைக்கப்பட்டார். கம்யூனிச இயக்கத்தில் பிரபலமானவராகவும் 'ஜனசக்தி' இதழ் ஆசிரியராகவும் இருந்தார்.ஆகஸ்ட் 22, 2004 - சென்னை நாள்ஆகஸ்ட் 22, 1639இல் மதராசபட்டினம் உதயமானது. இதை மையமாக வைத்து, சென்னை நகரின் பாரம்பரியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ள இந்த நாள் கொண்டாடப்படுகிறது.