தேதி சொல்லும் சேதி
பிப்ரவரி 11, 1847 - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாகக் கற்காமல், 1,300 விஷயங்களைக் கண்டறிந்து, 1,093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார்.பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைச் சொன்னார். 1859இல் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டு, உயிரினங்கள் தொடர்பான சிந்தனைகளை புதிய கோணத்தில் மாற்றியமைத்தார்.பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்1860இல் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, இனவெறிக் கொடுமையை ஒழித்தார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863இல் வெளியிட்டார்.பிப்ரவரி 13, 1879 - சரோஜினி நாயுடு பிறந்த நாள்சுதந்திரப் போராட்ட வீராங்கனை, 'கவிக்குயில்' என்று புகழப்பட்ட கவிஞர். 'இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும்' என்றார். 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமைக்குரியவர்.பிப்ரவரி 15, 1564 - கலிலியோ கலீலி பிறந்த நாள்நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை. தனது தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்துக்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்துக்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். 'பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன' என்ற நிகோலஸ் கூற்றை ஆய்வுகள் மூலம் விளக்கினார்.பிப்ரவரி 16, 1834 - எர்ன்ஸ்ட் ஹேக்கல் பிறந்த நாள்'மனித குலம் தோன்றியது இந்திய துணைக் கண்டத்தில்தான்' என்பது இவரது கணிப்பு. பல நாடுகளுக்குப் பயணம் செய்து, புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். உயிரியல் தொடர்பான பல சொற்களை அறிமுகம் செய்தார்.