உள்ளூர் செய்திகள்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

சங்கர்: என்னடா முன்னா, கறுத்துப் போயிட்ட? நம்ம ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாது. ஹஹ்ஹா... முன்னா: அவ்வளவு அழகாவா இருக்கேன்! ஏய் வெயிலே... உனக்கு நன்றி.ச: டேய்! சமாளிக்காத. என்ன சொன்னாலும் வெயில்ல அலையிறதை நிறுத்த மாட்டே, இல்ல? மு: நான் என்ன செய்ய? வெயிலுக்குப் பயந்தா நிம்மதியா ஊர் சுத்த முடியுமா?ச: நம்ம ஊர்லயே 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்திட்டு இருக்கு. நீ என்னடான்னா வெயிலப் பார்த்து பயம் இல்லன்னு சொல்ற.மு: ஓ... இவ்வளவு உக்கிரமா வெயில் அடிக்குதா? சூரியனுக்கு என்னாச்சு? திடீர்னு இவ்ளோ வெப்பத்தை பூமிக்கு ஏன் அனுப்புது?ச: சூரியன் நல்லாத்தான் இருக்குது. தூசி, புகையால காற்றில் கலக்கிற கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகமாகிருச்சு. அதனால, பருவநிலை மாறி அதிகபட்ச வெயில் நம்மைத் தாக்குது.மு: அடச்சே! இதுக்கும் நாமதான் காரணமா? அப்படின்னா, சும்மா இருந்த சூரியனை சூடாக்கிவிட்டுட்டு இப்போ அனுபவிக்கிறோம்.ச: வெயிலோட உஷ்ணம் அதிகமா இருக்குற கடுங்கோடைக் காலத்தை 'அக்னி நட்சத்திரம்'ன்னு சொல்றாங்க. ஆனாலும், அதவிடக் கடுமையான வெயில்தான் இப்போ கொளுத்துது.மு: அக்னி என்றால் நெருப்புதானே... ஆனாலும் நெருப்பைவிட அதிகமாச் சுட்டெரிக்குதே. இப்படியே போனால் எப்படி? இதுக்குத் தீர்வு என்ன?ச: ஒரே தீர்வு, மரங்களை அதிகமா வளர்க்குறதுதான். பசுமைத் தோட்டங்களை அமைக்கணும். காடுகளோட பரப்பளவை அதிகரிக்கணும்.மு: இவ்வளவுதானே? அப்படின்னா உடனே மரங்களை வளர்த்து, சூரியனை கூல் பண்ணிருவோம்.ச: அப்படின்னா புகை மற்றும் மாசுகளை என்ன செய்வே? பழைய வாகனங்கள்ல இருந்துதான் அதிக புகை வருது தெரியுமா?மு: அப்படின்னா அந்த வாகனங்களோட உரிமங்களை ரத்து செஞ்சு, ஓட்டுவதைத் தடை பண்ணணும். வாயு மூலமா இயங்குற வாகனங்களை அதிகரிக்கணும்.ச: பரவால்லையே... வெயில் உன்ன ஷார்ப் ஆக்கிருச்சே!மு: அப்படியா சொல்றே... ஹி... ஹி...ச: அதுக்காக இன்னும் ஷார்ப் ஆகணும்னு சொல்லி வெயில்ல சுத்திக்கிட்டே இருக்காதே. மு: நான் கறுத்துப் போகக்கூடாதுன்னு, நல்ல கருத்துச் சொல்ற. கேட்டுதானே ஆகணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !