உள்ளூர் செய்திகள்

பார்வையற்றவர்கள் செய்தித்தாள் வாசிக்க ஸ்மார்ட் கிளாஸ்

போலந்து நாட்டைச் சேர்ந்த 'பார்சி' (Parsee) என்ற தொண்டு நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு உதவும் 3டி ஸ்மார்ட் கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கண்ணாடியின் மூலம் பார்வையற்றவர்கள் செய்தித்தாள் வாசிக்க முடியும். இந்த ஸ்மார்ட் கிளாஸுடன் இணைக்கப்பட்டுள்ள கேமரா அவர்கள் வாசிக்க வேண்டியவற்றை புகைப்படமாக எடுத்து மொபைல் ஆப்புக்கு (Mobile App) இன்டர்நெட் மூலமாக அனுப்புகிறது. புகைப்படங்களில் உள்ள எழுத்துகள், வடிவங்கள், உருவங்களைத் தனித்தனியாகப் பிரித்து ஸ்மார்ட் கிளாஸுடன் இணைக்கப்பட்ட ஹெட் போன் மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கேட்டல் முறை மூலமாக செய்தித்தாளில் உள்ளதை அறிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !