உள்ளூர் செய்திகள்

இந்தியாவிற்கு வருகிறது ஆப்பிரிக்க சிவிங்கி!

தமிழ் பெயர்: சிவிங்கிஆங்கிலப் பெரிய : Cheetahஉயிரியல் பெயர்: Acinonyx Junatusகாணப்படும் நாடுகள்: ஆப்பிரிக்கா, ஈரான்வாழிடம்: புல்வெளிக் காடு, திறந்தவெளி காடுமொத்த எண்ணிக்கை: 7,100இந்தியாவில், ஆப்பிரிக்க சிவிங்கியை மறு அறிமுகம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தாக்கல் செய்த மனுவுக்கு, உச்ச நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.ஆப்பிரிக்க சிவிங்கியை இந்தியாவில் எந்தப் பகுதியில் விடுவிக்க வேண்டும், அவற்றால் அங்கு வாழ முடியுமா, சூழல் ஒத்துக் கொள்ளுமா போன்றவற்றைக் கவனமாக ஆராய்ந்தபின், அவற்றைக் கொண்டு வரவேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார்.ஆசிய சிவிங்கிகள் இந்தியா, ஈரான், அரபு நாடுகள் ஆகியவற்றில் காணப்பட்டன. ஆனால், தற்போது ஈரானில் மட்டுமே ஆசிய சிவிங்கிகள் காணப்படுகின்றன. அதுவும், வெறும் 50க்கும் குறைவான சிவிங்கிகளே எஞ்சியுளளன.சிவிங்கி, சிறுத்தை இரண்டையும் பலரும் குழப்பிக் கொள்வார்கள். சிறுத்தை, புலியைப் போன்றது. அதன் உடல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்மேல் கறுப்புத் திட்டுகள் பரந்து காணப்படும். ஆனால், சிவிங்கிக்கோ, உடல் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல், கறுப்புப் புள்ளிகள் இருக்கும். இவை இரண்டிற்குமான பொதுவான வித்தியாசம் இதுதான்.அதையடுத்து, சிறுத்தையைப் போல் கால் நகங்களை முழுவதுமான இழுத்துக் கொள்ள சிவிங்கிகளால் முடியாது. ஆக மொத்தம் இரண்டிற்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு.ஆசிய சிவிங்கிகள், இந்தியாவில் அழிந்ததற்கு வேட்டைதான் முக்கிய காரணம். எனினும் வாழிடம் இல்லாமல் போனதும் இன்னொரு காரணம்தான். 60 ஆண்டுகளுக்குமுன் திறந்த வெளிக் காடுகள், புல்வெளி காடுகள் எங்குள் இருந்தன. அங்கு தாவர உண்ணிகளான வெளிமான்களும் அதிகம் இருந்தன. வாழிட அழிவால், வெளிமான்களும் குறைந்தன. இது சிவிங்கியின் உணவுச் சங்கிலியைப் பாதித்தது. இதன் அழிவுக்கு இதுவும் ஒரு காரணம்.இப்படி இருக்க, மீண்டும் சிவிங்கியை மறு அறிமுகம் செய்வது சரிதானா? இந்தியக் காட்டுயிர் நிறுவனத் தலைவர் விவேக் மேனன், இதைப் பற்றிப் பேசும்போது, 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரிய ஊன் உண்ணிகள் நிச்சயம் தேவை. அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் சிவிங்கி உதவும்' என்றார்.சிவிங்கியை அறிமுகம் செய்வதற்குமுன் செய்ய வேண்டியவை:* இந்தியாவில், சிவிங்கிகள் வாழத் தகுதியான இடங்கள் உண்டா?* சிவிங்கிக்குத் தேவையான தாவர உண்ணிகள் கிடைக்குமா?* மனிதன் - சிவிங்கி மோதன் ஏற்படாமல் இருக்குமா?இவ்வளவு கட்டங்களையும் தாண்டி ஆப்பிரிக்கச் சிவிங்கிகள் இந்தியா வருமென்றால், அது பெரிய விஷயம்தான். மேலும், அவை பாதுகாப்பாகவும், புதிய நிலப்பரப்பின் சவால்களை எதிர்கொண்டும் வாழுமானால், இது இந்தியாவின் முக்கிய சாதனையாக அமையும்.* ஆப்பிரிக்க நாட்டின் நமீபியா பகுதியில் இருந்துதான் சிவிங்கிகள் கொண்டு வரப்பட உள்ளன.- சு. சுந்தரசேகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !