உள்ளூர் செய்திகள்

எகனை மொகனை விடுகதை

01. இந்த ஆளோட அப்பா என்னோட மகன். இந்த ஆள் யார்?பேரன்02. எட்டுப் பேர் நாங்க. எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம். நாங்க யாரு?செஸ் பான்03. ஒருவன் மூழ்கிவிட்டான் நனையவில்லை. எப்படி?புதைகுழி04. தயாரித்தவருக்குத் தேவையில்லை வாங்கியவருக்குப் பயனில்லை உபயோகிப்பவர் பார்ப்பதில்லை. அது எது?சவப்பெட்டி05. காலையில் நாலு கால் மதியத்தில் ரெண்டு கால் மாலையில் மூணு கால் விளக்கம் என்ன?தவழுதல், நடத்தல், கழி ஊன்றி நடத்தல்06. ஒரு மூலையில் இருந்துகொண்டே உலகத்தைச் சுற்றும். அது எது?தபால் தலை (ஸ்டாம்ப்)07. முடியும் இல்லாத, முகத்திலும் இல்லாத தாடி. அது எது?காத்தாடி08. சாப்பிடக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்; குடிக்கக் கொடுத்தால் நான் சாவேன். நான் யார்?நெருப்பு09. சுவருக்கு அப்பாலும் பார்க்க உதவும் கண்டுபிடிப்பு எது?ஜன்னல்10. வானவில்லில் கடைசியில் இருப்பது என்ன?ல் என்னும் எழுத்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !